ஆப்பாவின் வாழ்வின் சுருக்கம்- டகைந ளாழசவ hளைவழசல ழக டயவந மு.ளுiஎயபயெயெஅ
கதிரவேல்.சிவஞானம் (ஐயாயிரம் போடியார்) “வாழ்க்கை குறிப்பு”
மகிழடித்தீவின் பிரபலங்களில் கதிரவேல் அவர்களும் ஒருவராவார். இவர் ஒரு சிறந்த முருக பக்தராவார் கதிர்காமத்திற்குக் குழுவாகச் சென்று வரும் இவர்களுக்கு 1956ம் ஆண்டு ஒரு சோதனை மிகுந்த காலமாகும் சிங்கள தமிழ் கலவரத்தின் காரணமாக இவர்களது கதிர்காம யாத்திரை தடைப்பட்டது. அக்காலகட்டத்தில் திரு.வே.உ.குமார சிங்கம் முனைக்காட்டைச் சேர்ந்த பல பெரியார்கள் கதிர்வேல் ஆகியோர் தாந்தாக் காட்டை வெட்டி தாந்தாமலை முருக வழிபாட்டை ஆரம்பித்து வைத்த பெருமைக்கு உரியவர் இப்பெரியாரே திரு.சிவஞானம் அவர்களது தந்தையாவார்.
இவரது தாயாரை நோக்கி மகிழடித்தீவின் இரண்டாவது பொலிஸ்தலமை முத்தையாபோடி அவர்களது பேத்தியாவார். பொலிஸ் தலைமை முத்தையாப் போடியார் சிறந்த ஆளுமை கொண்டவர். சேவூகப்பற்று வட்டையின் வட்ட விதானையாக இருந்து அரசுக்கு எதிராக வாதாடிஇ அந்த ப+மியை உடமையாக்காது தடுத்து வெற்றி கண்டவர். அந்த வழக்குச் சாட்சியத்தில் தான் 16 வருடம் வட்டவிதானையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது பேத்தியாரான வள்ளியம்மை அவர்களே திரு.சிவஞானம் அவர்களது தாயாராவார்.
இவ்வாறு சிறந்த பாரம்பரியத்தில் வந்த திரு.சிவஞானம் அவர்கள் தனது இளமைக்கல்வியை முதலைக்குடா மகாவித்தியாலயத்தில் கற்று முடித்து தனது தந்தையாரின் வயல் நிலம் மாட்டுப்பட்டி போன்றவற்றைக் கண்ணும் கருத்துமாக பேணி வந்தவர்.
இவரது துடிப்பான செயற்பாடுகளும் இவரது சகோதரியின் கணவரும் பிரபல சோதிடரும்இ விஷவைத்தியருமான அமரர்.தம்பிப்போடி சோதிடர் பண்டாரியா வெளியைச் சேர்ந்தவரும் திரு.சிவஞானம் அவர்களது மனைவியின் உறவினருமாக இருந்த காரணத்தினால் இவரும் பண்டாரியாவெளியில் திருமணம் செய்கின்ற சந்தர்ப்பம் வாய்க்கப்பெற்றது.
பண்டாரியாவெளியைச் சேர்ந்தவரும் தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் கலிங்க குலவண்ணக்கருமான திரு.கதிராமப்போடி வண்ணக்கர் அவர்களதும்இ அதே ஆலயத்தின் கோபுரத்தை அமைத்துக் கொடுத்தவருமான திரு.மயில்போடி விதானையார் அவர்களுக்கும் சகோதரியான சின்னப்பிள்ளைக்கு அவரது கணவர் அலையப்போடி அவர்களுக்கும் இளைய மகளான வாலப்பிரகாசம் என்பவரைத் திருமணம் செய்து. மிகச்சிறப்பான குடும்பவாழ்க்கை நடத்தியவர்.
சிறந்த விவசாயி இவர் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களையூம்இ மாட்டுப் பட்டியையூம் வேறுபல தோட்டம் துரவூகளையூம் இத்தனை செல்வங்கள் இருந்தபோதும்இ அவர் தனது வாழ்க்கையை ஒரு சாதாரண குடி மகளது வாழ்க்கை போன்று துவிச்சக்கர வண்டியில் பிரயாணம் செய்து மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்ததை யாம் அனைவரும் அறிவோம்.
தனது பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த கவனம் கொண்டிருந்தவர் சகல குழந்தைகளையூம் பல்கலைக் கழகப்பட்டதாரியாக்கி சிறந்த கல்விமான்கள் ஆக்கியவர்இ பேராசியர்இ கணக்காளர்இ சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்இ நில ஆணையாளர்இ விலை மதிப்பீட்டாளர்இ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ ஆசிரியர் போன்ற பல துறைகளிலும் வல்லுனரான தன் பிள்ளைகள் ஒழுக்கத்திலும் உயர்த்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாகவூம் பிடிவாதமாகவூம் இருந்தவர்.
தனது மூத்த மகனான பேராசிரியர் மகேஸ்வரன் அவர்களை சிவானந்தா பாடசாலையில் சேர்த்த பின்பு பின்வருமாறு கூறினார். மகேஸ்வரனை சிவானந்தாவில் சேர்த்துள்ளேன். வீட்டிலோஇ சிவானந்தா விடுதியிலோ இருக்க விரும்பவில்லை சுவாமியூடன் கதைத்து அனாதைக் குழந்தைகள்ளுடன் படிக்கவிட்டுள்ளேன். மொட்டைத்தலையூம்இ சந்தனப் பொட்டுடனும் நிற்கின்றான். என்று கூறி மகிழ்ந்தார். இச் செயல் கல்வியையூம் விட ஒழுக்கத்திற்கு அவர் கொடுத்திருந்த மதிப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
தான்மட்டுமின்றி எல்லோரும் உழைத்து முன்னேற வேண்டும். என்ற மனப்பான்மை கொண்டவர் உறவூகளை சிறப்பாகப் பேணியவர். கடவூளின் படைப்புகள் சகலத்தையூம்இ மிருகம்இ பறவைஇ மரம்இ செடி யாவற்றையூம் அன்பாகப் பேணியவர் சகல வாழ்வூக்கும் உதவூம் சூரியபகவானை சாத தியானித்து வந்த ஒருவர்.
வாழ்க்கையை வழமாக வாழ்வதற்கு நம்பைப் போன்றவர்கள் படிப்பதற்குச் சிறந்த ஒரு புத்தகம் இந்தச் “சிவஞானம்” என்ற புத்தகமாகும் இதில் நாம் கற்பதற்கு அநேகம் உண்டு.
இவ்வாறு ஒழுக்கம்இ சிறந்த மனிதநேயம்இ தெய்வசிந்தனை விடாமுயற்சி கொண்ட திரு.க.சிவஞானம் அவர்களின் ஞாபகார்தமாக அவரது பிள்ளைகளால் ஆரம்பிக்கப்பட் சிவஞானம் நற்பணி மன்றம் உருவாக்கப்பட்டு செயற்படுத்தபடுவதை பற்றி நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இவரது பெயரால் உருவாகும் நற்பணி நிலையத்திற்கு நான் திரு.க.சிவஞானம் அவர்களை பற்றி முகவூரை வழங்குவதை இட்டு நான் பெரும் சந்தோசமடைகின்றேன்.
திரு.திருநாவூக்கரசு
மக்கள் வங்கி முன்னாள் முகாமையாளர்
மகிழடித்தீவூ
மட்டக்களப்பு.
Sivaghanam Foundation,is being implementing different projects benefiting children from low-income communities and children from dwellings and underserved settlements. Our local NGO gives support to the local communities with projects to improve the lives of kids in the north and north east area. With the help of our partners and well-wishers we are empowering thousands of children and their families to be agents of change.Sivaghanam Foundation,is being implementing different projects benefiting children from low-income communities and children from dwellings and underserved settlements. Our local NGO gives support to the local communities with projects to improve the lives of kids in the north and north east area. With the help of our partners and well-wishers we are empowering thousands of children and their families to be agents of change.
Founder
Siva Parameswaran is a local resident trying to improve the lives of the fellow people Batticalo. He is a proud product of the University of Colombo. He has completed his first degree on Estate Management and Valuation and immediately started his career in TERM(Tsunami Education Rehabilitation Monitor)-Ministry Of Education, a Project to coordinate NGO`s through out the country to improve the education system of the country.
Siva Parameswaran then moved back to his studies and completed his MBA from the University of Colombo. He has also started his career as a government valuer and currently he is the district valuer for the Batticaloa.
After the decease of his beloved father, Siva wanted to give back to his own community in the name of his father and initiated this movement.